ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்!!!!!

தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். கர்ப்பத்தின் 29ம் வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளையும் 3 பெண் பிள்ளைகளையும் தமது மனைவி பெற்றெடுத்துள்ளார் என அவரது கணவர் Teboho Tsotetsi தெரிவித்துள்ளார்.

அவர் ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் கர்ப்பமாக இருந்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என நினைக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியாது என Teboho Tsotetsi ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். ஏற்கனவே 6 வயதில் இரட்டையர்களுக்கு தாயாரான Gosiame Sithole, தமக்கு ஏற்பட்டது இயற்கையான கர்ப்பம் இது எனவும், கருவுறுதல் சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வழக்கமான மருத்துவ சோதனையின் போது ஒருமுறை தாம் 6 குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் எனவும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அது 8 குழந்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மருத்துவர்களின் பேச்சை நம்ப முடியாமல் இருந்ததாகவும் ஆனால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் தமக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றாலும், தற்போது மிகுந்த மகிழ்ச்சி என அவரது கணவன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக உள்ளது. தற்போது Gosiame Sithole 10 பிள்ளைகளை பெற்றெடுத்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது.

நன்றி வன்னிநெட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s